திடீர் விருந்தினர் வருகை என்ன செய்ய அட இருக்கவே இருக்கு நம்ப உப்புமா ஹேய் ஓடாதீங்கப்பா அந்த மாதிரி அருமையான டிபஃன் உண்டோ கிடையவே கிடையாது.
நல்ல காச்சல் வெங்காயமா பாத்து வெட்டி அதுவும் ஒரே சைஸா நறுக்கி ( JV அப்படி அழகா ஒரே சைஸா வெட்டுவார் )எதிலும் ஒரு அழகுணர்ச்சி வேணும்ல கூடவே பச்சைமிளகாய் இஞ்சி நறுக்கி தாளிச்சு அப்பறம் வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கும் போது வரும் வாசனை இருக்கே ஆஹா அருமை ஊரை கூட்டும்.
அப்பறம் தண்ணியை கொட்டி அது தளைக்கும் போது ரவையை சேர்த்து இறக்கும் போது நல்ல 2 பெரிய ஸ்புன்ல நெய்யை விட்டு வானலியை பாத்தா வெள்ளை உப்புமாவில வைரக்கல்லு மாதிரி வெங்காயம் பளபளக்க அடடா உப்புமா ராஜ அம்சத்தோட பாக்கவே சூப்பர்.
சிலர் அதுக்கு சட்னியோட சாப்பிடுவாங்க எங்க வீட்ல அரைச்சு விட்ட சாம்பார் முதல் சாய்ஸ் அப்பறம் வத்த குழம்பு ஊறுகாய்ன்னா எலுமிச்சங்காயிலேர்ந்து வடுமாங்காய் ஆவக்காய் மாகாணி வரை வெளுத்து கட்டுவோம.
முதல் serving இப்படி இரண்டாவது தயிரோட அட ஆமாங்க நாங்க தயிர் இல்லாம தோசை இட்லி கூட சாப்ட மாட்டோம்.
சிலர் காய்கறி எல்லாம் போட்டு ஹெல்த்து அது இதுன்னு உப்பாமையே தேசியக்கொடி கலருக்கு ஆக்கிடறாங்க அது எங்க வீட்ல கிடையாது.
இரண்டாவது serving போதே பக்கத்தில லேசான கசப்பு சுவையோட காப்பி இருக்கனும் ஒரு வாய் காப்பி ஒரு வாய் உப்புமான்னு சாப்பிடற சுகத்துக்கு ஈடா எதுவுமே கிடையாது.
எங்கம்மா மடியா வெங்காயமே போடாம பண்ணற உப்புமாவோட சுவை எங்கயுமே கிடைக்கலை எனக்கு .
அதோட விடுவோமா இராத்திரி சாப்பாட்டுக்கு குழம்பு சாத்திலேர்ந்து தயிர் சாதம் வரை தொட்டுக்க உப்புமா சாப்பிடற ஒரே குடும்பம் எங்களோடதுதான் ஹிஹிஹி.
இப்படிபட்ட அருமையான உப்புமாவை பழிக்காதீங்கப்பா இதுக்கு முன்னாடி பர்கர்வாது பீட்ஸாவாது .
Love you my dear Rava Upmaa